சினிமா

நடிகை த்ரிஷா எடுத்த அதிர்ச்சி முடிவு

தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார் த்ரிஷா. 22 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கிறார். விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டு நடித்து வரும் த்ரிஷா, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகை த்ரிஷா, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னவென்றால், இனி நடிக்கப்போவதில்லை, சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என த்ரிஷா முடிவு செய்துள்ளதாக பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. த்ரிஷா வெளிப்படையாக பேசினால் மட்டுமே இது உண்மையா அல்லது வதந்தியா என தெரியவரும். அரசியல் கட்சி துவங்கிய விஜய், தளபதி 69 படம்தான்தன்னுடைய கடைசி படம், இதன்பின் சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

விஜய்யை தொடர்ந்து த்ரிஷாவும் சினிமாவிலிருந்து விலகி ஓய்வு எடுக்கப்போவதாக முடிவுள்ளார் என வெளிவந்துள்ள செய்தி, ரசிகர்களுக்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், உண்மையான தகவல் தானா, அல்லது வதந்தியா என்று.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *