இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் அமைச்சர் தகவல்

#image_title

இரவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளையோ அவற்றின் நேரத்தையோ நிறுத்த அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,”நாட்டில் இரவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளின் நேரம் குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சால் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகளையோ அல்லது அவற்றின் நேரத்தையோ நிறுத்த அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை, நீதிமன்ற தீர்ப்புகளின்படி மட்டுமே அது செயற்படுத்தப்படும். நாட்டிற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசாங்கம் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

2005/38 நீதிமன்றத் தீர்ப்பு ஊடாக பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் விதம் தொடர்பில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின்டி 2007/2008 பொலிஸ் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதுடன், அது 2010 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. சுற்றுலாத் துறைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் இந்த திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.” என கூறியுள்ளார்.

Exit mobile version