பாரிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) பகுதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விஜயம் செய்துள்ளார். அழிவுக்குள்ளாகியுள்ள பகுதிகளின் அளவை மதிப்பிடுவதற்காக சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில் லொஸ் ஏஞ்சல்ஸில் பரவிவரும் காட்டுத்தீயானது 79 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகச் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காட்டுத்தீ காரணமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.