வெளியேறத் தயார்! அறிவித்தார் மகிந்த

#image_title

வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடன் அதை விட்டு வெளியேறுவேன் என மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக இடம்பெற்று வரும் விவாதம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இந்த நாட்டின் குடிமகனாக, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லங்கள் அல்லது வசதிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஏற்றுக்கொள்வது எனது பொறுப்பு. வீட்டை காலி செய்ய நீங்கள் எனக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கினால், அந்த திகதியில் நான் வெளியேறுவேன். இது மக்களுக்கானது. நான் மக்களின் பிரதிநிதியாக இந்த நாட்டு மக்களுக்கு நேர்மையாக சேவை செய்தேன்.

அரசாங்கம் மக்களால் நியமிக்கப்பட்டது. எனவே அரசாங்கம் ஒரு முடிவை எடுத்து என்னிடம் கூறியவுடன், நான் செல்வேன். அதிகாரபூர்வமாக உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கவில்லை. அதற்கு எந்த அவசியமும் இல்லை. அரசாங்கம் என்னை வெளியேற செய்யச் சொல்லும் நாளில் நான் வெளியேறுவேன். nநாட்டிற்காக பணத்தை பெற்றுக்கொள்ள இந்த வீட்டை 46 இலட்சத்திற்கு வாடகைக்கு விடுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

என்னைப் பற்றி எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு எனக்கு தகவல் தாருங்கள். ஊடகங்களிடம் கூறிய பிறகுதான் எனக்குத் தெரியவருகிறது” என கூறியுள்ளார்.

Exit mobile version