பிணை அனுமதி: ஜனாதிபதி அறிவிப்பு

#image_title

கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் அனுமதிக்கப்படுவது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல, மாறாக அவர்களை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதே நோக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகமவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர்,

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் பிணை கிடைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.அதுதான் சட்டம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி, சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விசாரணைகளைத் தொடரலாம். வழக்குத் தாக்கல் செய்வதன் மூலமே சந்தேக நபர் ஒருவரை தண்டிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version