இலங்கை

சீனாவுடனான இலக்குகள்! அநுரவெளிப்படை

விவசாயம், மின்சாரம் மற்றும் புதிய எரிசக்தித் துறைகளில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து எதிர்வரும் காலங்களில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். சீனாவின் வளர்ச்சி சாதனைகளின் ஆழமான வரலாற்றையும், மக்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அநுர வலியுறுத்தியுள்ளார். சீன விஜயம் தொடர்பில் அந்நாட்டு தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு பண்டைய காலத்திலிருந்தே தொடர்கிறது. இரு தரப்பினரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்த்தக பரிமாற்றங்களைக் கொண்டுள்ளனர். சீனாவின் ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு உறவுகளை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல எமது அரசாங்கம் ஆவலுடன் உள்ளது.

விவசாயம், மின்சாரம் மற்றும் புதிய எரிசக்தித் துறைகளில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து எதிர்வரும் காலங்களில் கவனம் செலுத்தப்படும். சிச்சுவானில்(Sichuan) உள்ள பல நிறுவனங்களை பார்வையிட்டேன் . புதிய கிராமப்புற வாழ்க்கையை அனுபவித்தேன். சிச்சுவானில் ஓபரா நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டேன். இரு நாடுகளும் வலுவான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை உருவாக்க முடியும் என்று நம்பமுடிகின்றது.

சீனாவின் செயற்பாடுகள் நவீனமயமாக்கல் மற்றும் உலகதிற்கு ஒரு புதிய வளர்ச்சி யோசனையை வழங்கியுள்ளது. ஒவ்வொரு நாடும் அதன் சொந்த குணாதிசயங்களின்படி, சொந்த நவீனமயமாக்கல் பாதையை ஆராய வேண்டும். சீனாவால் முன்மொழியப்பட்ட உலகளாவிய மேம்பாட்டு முயற்சி, உலகளாவிய பாதுகாப்பு முயற்சி மற்றும் உலகளாவிய நாகரிக முயற்சி ஆகியவை உலக பன்முகத்தன்மையைப் பேணுவதற்குமான, வளர்ச்சி அனைவருக்கும் பயனளிப்பதை உறுதி செய்வதற்கும் உலகளாவிய முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் முக்கியமான ஆதரவை வழங்குகின்றன.

முயற்சிகள் பல்வேறு கலாச்சாரங்களின் தனித்துவமான குணங்களை எடுத்துக்காட்டுகின்றன. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிதலை ஊக்குவிக்கின்றன. மேலும் உலகளாவிய வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கின்றன” என அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார். சீன மக்களுக்கு சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும், “பாம்பு ஆண்டில் நல்வாழ்த்துக்கள், வசந்த விழா நல்வாழ்த்துக்கள்” (wished the Chinese people a happy Chinese New Year “Good luck in the Year of the Snake, happy Spring Festival).என்று சீன மொழியில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *