வேறொரு நபருக்கு கிடைக்கவிருக்கும் டயானாவின் சொத்து

#image_title

டயானாவுக்கு சொந்தமான 13,000 ஏக்கர் எஸ்டேட் , அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியமுக்கோ அல்லது ஹரிக்கோ செல்லாமல் வேறு ஒரு நபருக்கு கிடைக்க இருக்கிறது. அந்த நபர் வேறு யாருமில்லை, டயானாவின் தம்பியான சார்லஸ் ஸ்பென்சர் (Charles Spencer)இன் மகனான லூயிஸ் ஸ்பென்சர்தான் (Louis Spencer, 30).

ஸ்பென்சர் குடும்ப மரபுப்படி, ஒருவரது சொத்துக்கள், அவருக்கு முதலில் பிறந்த பிள்ளைக்குச் செல்லாமல், அந்தக் குடும்பத்தில் பிறந்த முதல் ஆண் பிள்ளைக்குத்தான் செல்லும். டயானாவின் குடும்பச் சொத்து, அவரது தம்பியான சார்லஸ் ஸ்பென்சருக்கு (Charles Spencer) மூத்த பெண் பிள்ளைகள் மூன்று பேர் இருந்தும், அவரது முதல் மனைவியான விக்டோரியாவுக்கு (Victoria Lockwood) பிறந்த மகனான லூயிஸ் ஸ்பென்சருக்குத்தான் கிடைக்கும்.

டயானாவின் குடும்பச் சொத்தான 13,000 ஏக்கர் எஸ்டேட், வில்லியமுக்கோ, ஹரிக்கோ, அல்லது டயானாவின் தம்பி மகள்களுக்கோ செல்லாமல், மகனான லூயிஸ் ஸ்பென்சருக்குக் கிடைக்க இருக்கிறது.

Exit mobile version