முதியோர் இல்லத்தில் காதல்.., 4000 பேருக்கு விருந்து கொடுத்து திருமணம்

#image_title

முதியோர் இல்லத்தில் உருவான காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அசாம், கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (71). இவருக்கு திருமணமாகவில்லை. தனது 2 சகோதரர்களின் ஆதரவில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டதால் பெல்டோலா பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா (65). இவருக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணமாகவில்லை.கவுகாத்தியில் மத்காரியா பகுதியிலுள்ள பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த வருடம் மார்ச் மாதம் சந்தித்துள்ளனர். பத்மேஸ்வரருக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் இந்தி பாடல்களை அடிக்கடி பாடுவார். இது ஜெயபிரபாவுக்கு மிகவும் பிடிக்கவே, இருவரும் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இரு முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு தெரியவரவே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

இத்திருமணத்தை நடத்தி வைக்க மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் விருப்பம் தெரிவித்தது. இருவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து முறைப்படியே திருமண சடங்குகள் அனைத்தும் நடந்தன. இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் கூறுகையில், “பொது நிதியுதவியுடன் இந்த திருமணத்தை செய்து முடித்துள்ளோம். திருமணத்திற்கு வந்த 4000 பேருக்கு உணவு பரிமாறியுள்ளோம். மணமக்களை வாழ்த்தி சென்றனர்” என்றார்.

Exit mobile version