2024 ஐசிசி டெஸ்ட் விருதை வென்ற பும்ரா

#image_title

ஐசிசி என்ற சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா(Jasprit Bumrah) வென்றுள்ளார். மூலம் இந்த விருதை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 2024ஆம் ஆண்டு பும்ரா,13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 71 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு, இங்கிலாந்தின் ஜோ ரூட் அவுஸ்திரேலியாவின் கம்மின்ஸ், இங்கிலாந்தின் ஹரி புருக், இலங்கையின் கமிந்து மெண்டிஸ் ஆகியோருடனான போட்டியின் மத்தியில் பும்ராவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இந்திய மகளிர் அணியின் துணை தலைவர் ஸ்மிருதி மந்தனா 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் ஒருநாள் போட்டி வீராங்கனையாக ஐசிசியினால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஸ்மிருதி மந்தனா 13 இன்னிங்ஸில் 747 ஓட்டங்களை பெற்றிருந்தார்.அதில் 4 சதங்கள் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கியிருந்தன. 2024 ஆம் ஆண்டிற்கான ஆடவர் ஒருநாள் போட்டிகள் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டில் 12 இன்னிங்ஸ்களில் 417 ஓட்டங்களை பெற்றிருந்தார் அத்துடன் பந்து வீச்சில், 13 இன்னிங்ஸில் 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Exit mobile version