டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடிய மோடி

#image_title

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன்(Donald Trump), பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருதரப்பு உறவு குறித்து பேசியதாகவும், உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி(Narendra Modi) வெளியிட்டுள்ள பதிவில்,

“எனது அன்பு நண்பர் டொனால்ட் ட்ரம்புடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது பதவி காலத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நமது மக்களின் நலனுக்காகவும், உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version