2 மாதங்களில் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தமை போதவில்லையா!

#image_title

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு 2மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ருவான் செனரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மிகவும் சிரமப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். நாட்டை கள்வர்களின் கைகளில் ஒப்படைத்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வெற்றியைத் தொடர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகள் முழு வீச்சில் முன்னெடுப்படும் என ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version