சினிமா

விஜய் அவரோட குடும்பத்தோட இல்லைனு பேசிக்கிறாங்க..? விஜய்யின் சித்தப்பா

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக காணப்படுபவர் தளபதி விஜய். ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகின்றார். தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்க உள்ளார் விஜய். விஜய் தொடர்பில் சினிமா, அரசியல் என்பவற்றைத் தாண்டி அவருடைய தனிப்பட்ட குடும்ப ரீதியிலும் பல விமர்சனங்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு எல்லாம் அசராதவராக தன்னுடைய இலக்கை நோக்கி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து வருகின்றார்.

கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த விஜய், தனது முதல் மாநாட்டை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். இது பல அரசியல் தலைமைகளுக்கும் தலை இடியாக மாறியது. அத்துடன் விஜயின் இறுதி படத்திற்கு ‘ஜனநாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படமும் விஜய்யின் அரசியல் பற்றி பேசும் என நம்பப்படுகின்றது. இளையதளபதி விஜயின் சித்தப்பா அவருடைய குடும்பம் பற்றி அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அவரிடம் விஜய் பற்றி பல விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அவர் தனது பேமிலியுடன் இல்லை தனியாகத்தான் இருக்கின்றார் என்று கூறப்பட்டது. இதன் உண்மை என்ன என்று கேட்கப்பட்டது.

விஜய் தனது பேமிலியுடன் தான் இருக்கின்றார். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால் விஜய்யின் மகன் அமெரிக்காவில் படித்துக் கொண்டு உள்ளார் அவருடைய மகள் லண்டனில் படிக்கின்றார். பெண் குழந்தைக்கு பாதுகாப்பு ஆகவே விஜயின் மனைவி சங்கீதா அவருடன் உள்ளார். பையன் எப்படி என்றாலும் இருக்கலாம் ஆனால் பெண் குழந்தையை தனியாக விட முடியாது. தான் ஒரு தாயாக அவர் தனது பிள்ளைகளை கவனிப்பதற்காக லண்டனில் வசித்து வருகின்றார். விஜயை பார்ப்பதற்கு ஓராயிரம் பேர் இருக்கின்றார்கள். ஆனால் அவருடைய பிள்ளைகளை பார்க்க அவருடைய தாயாக சங்கீதா மட்டும்தான் இருக்கின்றார். இந்த விஷயத்தை சும்மா ஊதி பெரிதாக்குகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *