உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரியின் மனு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

#image_title

மைத்திரிபால சிறிசேன(Maithripala sirisena) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கான உத்தரவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 6 அன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உயிர்த்த பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவிருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்த போதிலும் அதைத் தடுக்கத் தவறியதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மனுவை தாக்கல் செய்துள்ளார்.

வழக்கை முன்னர் விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் பல நீதிபதிகள் பதவி உயர்வு பெற்றுள்ளதால், மனு புதிய அமர்வின் முன் விசாரிக்கப்படும் என்றும் அமர்வு அறிவித்தது. மனுவின் விசாரணையை பெப்ரவரி 06 அன்று புதிய அமர்வின் முன் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version