Pan Card தளத்தில் தமிழ் மொழியும் சேர்க்கவேண்டும்- விஜய் சேதுபதி

#image_title

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.   மதுரையில் வருமானத்துறையினர் நடத்திய நிகழ்ச்சியொன்றில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று பேசினார்.

“அரசு சார்ந்த சில விடயங்களை தெரிந்துக் கொள்வதற்கு மற்றவர்களைக் கேட்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி, அவற்றின் சிக்கல்கள் போன்றவற்றை எளிமையாகத் தெரிந்துக் கொள்வதற்கு அரசு இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் கார்ட்டூன் வடிவத்தில் கொடுத்து இருப்பது சுவாரசியமாக இருந்தது.

அதேபோல், பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும். தமிழ் மொழியும் இருந்தால் மற்றவர்களைச் சாராமல் அனைவரும் எளிதாகப் பயன்படுத்தலாம். வருமான வரி செலுத்துவது அவசியம். வருமான வரி செலுத்துவோருக்கு ஏதாவது பலன்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று பேசினார்.

Exit mobile version