தமிழ் கைதியை மிரட்டிய முன்னாள் அமைச்சர்: நீதிமன்றம் உத்தரவு

#image_title

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து, தமிழ் கைதியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த வழக்கானது ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நேற்று விசாரணைக்கு வரவிருந்த போதிலும், அனுராதபுரம் தலைமை நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரியா திடீரென விடுமுறை எடுத்ததால், ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு செயல் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை தரப்பு நடத்திய விசாரணையின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ. சுமந்திரன், கேசவன் சஜந்தன் மற்றும் பெனஸ்லான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version