தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். அடுத்த வாரம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கியுள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்க, த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். முதல் முறையாக ரூ. 100 கோடிக்கும் மேல் அஜித் சம்பளம் வாங்கியது இப்படத்திற்காகதான். அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கப்போகிறது என்றும், இப்படித்தில் நடிக்க ரூ. 226 கோடி சம்பளம் வேண்டுமென அஜித் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.












