அமெரிக்க விமான விபத்து: 41 சடலங்கள்

#image_title

அமெரிக்காவில் விமான விபத்தில் இதுவரை 41 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கான்சாஸ் மாகாணத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, விர்ஜினியாவிலுள்ள ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்துக்கு அருகே இராணுவ ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான நிலைய பணியாளர்கள் உட்பட 64 பேர் பயணித்த நிலையில் அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 இராணுவ வீரர்களும் இதில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான அந்த விமானம் Potomac ஆற்றில் விழுந்த நிலையில், உயிரிழந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி இதுவரை 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் விமானத்தின் மீதமுள்ள பயணிகளுக்காக தேடுதலை தொடர்ந்து மெற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version