சுகாதார அமைப்புக்கு சுமையாக நோய்கள்!

#image_title

நாட்டில் தொற்றக்கூடிய தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேற்படி நோய்களுக்கான சிகிச்சை சேவைகளைப் போன்று நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற, இலங்கை போஷாக்கு சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விஞ்ஞான ஆய்வு அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அவர் உரையாற்றுகையில்,”நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான அடிப்படை விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவது மிகவும் அவசியம்.

நோய்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். இலங்கை ஊட்டச்சத்து சங்கம் இதில் முன்னணியில் உள்ளது. ஊட்டச்சத்தை உயர்த்தி, சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தி, அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். தனிநபர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இந்த நாட்டில் சுகாதார அமைப்பின் தேவையற்ற செலவைக் குறைக்கவும் உதவும்.

இலக்கை அடைவதற்கு, மருத்துவ வல்லுநர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகப் பிரிவுகளின் பங்களிப்பு செய்ய வேண்டும்.” என கூறியுள்ளார்.

Exit mobile version