வடக்கில் கொட்டிக்கிடக்கும் அரச வேலைவாய்ப்புகள்

#image_title

வடக்கு மாகாணத்தில் அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை (31) ஜனாதிபதி மேற்கொண்டிருந்த போது இதனை தெரிவித்துள்ளார்.

காவல்துறை திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் தமிழ் மொழி மூல காவல்துறை உத்தியோகஸ்த்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். காவல்துறை வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி அநுர, தமிழ் இளைஞர் யுவதிகள் சேவையில் இணைய வந்தால், 9 ஆயிரம் பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளையோரை காவல்துறை வேலையில் இணைய ஊக்கப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version