அமெரிக்காவில் கடுமையாகும் விசா விதிமுறைகள்

#image_title

அமெரிக்காவில் (United States) விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கும் இந்திய (India) மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்ற நிலையில், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் இந்திய மாணவர்களுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. விசா காலாவதி ஆன பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர் விசா மற்றும் H-1B விசாக்கள் காலாவதியானாலும் நாட்டில் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்படுகின்றன. குடியேற்ற ஆய்வுகள் மையத்தின் நிபுணரான ஜெசிகா எம்.வாகன் கருத்து தெரிவிக்கையில், “கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் தங்கள் விசா காலாவதியான பிறகும் தங்கியுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 இந்திய மாணவர்கள் தங்கள் விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

காரணமாக தனிநபர்கள் தங்கள் மாணவர் விசாக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவர்கள் கல்வியை முடித்தவுடன் நாட்டைவிட்டு வெளியேறுவதை உறுதி செய்யவும் கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version