இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய புலமைப்பரிசில்

#image_title

2026 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய புலமைப்பரிசில் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. மதிப்புமிக்க உதவித்தொகைகள், இலங்கை உட்பட தகுதியுள்ள நாடுகளைச் சேர்ந்த சிறந்தவர்களுக்கு, அவுஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கின்றன.

திட்டம், விண்ணப்பத்தாரிகள், நாடு திரும்பியதும் தங்கள் நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பல்வேறு துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தகுதி அளவுகோல்கள், விண்ணப்ப வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் விவரங்களைச் சரிபார்க்க https://rb.gy/mewctl ஐப் பார்வையிடுமாறு கோரப்பட்டுள்ளனர். 2025 ஏப்ரல் 30 புதன்கிழமை வரை விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version