அமெரிக்காவில் தொடரும் விமான விபத்துகள்! 7 பேர் பலி

#image_title

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் மற்றுமொரு விமான விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயணிகள் விமானம் இராணுவ உலங்கு வானூர்தி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தினை தொடர்ந்து, பிலடெல்பியாவில் பிராந்தியத்தில் குறித்த விபத்து பதிவாகியுள்ளது.

பிலடெல்பியாவில் பிராந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு வணிக வளாகத்திற்கு அருகே ஒரு குழந்தை, அவரது தாயார் மற்றும் நான்கு பேரை ஏற்றிச் சென்ற மருத்துவ போக்குவரத்து விமானமே அங்குள்ள கட்டிடங்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், மாலை 6:30 மணியளவில் அங்குள்ள உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தினால், குறைந்தது ஐந்து வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version