இலங்கை

இலங்கை பாடசாலைகளிலும் Clean Sri Lanka

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘Clean Sri Lanka’ திட்டத்தின் நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், கல்வி அமைச்சில் நடைபெற்றுள்ளது. சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் நெறிமுறை குணங்களை வளர்ப்பது போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தொடர் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ‘Clean Sri Lanka’ திட்டத்தின் நோக்கங்களை விளக்கி, தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். ‘Clean Sri Lanka’ திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவையான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்கள் ஜி. எம். ஆர். டி. அபோன்சோ, எச். எம். கே. ஜே. பி. குணரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரந்த மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் பயிற்சியில், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றுள்ளனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *