டாப் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல் என உச்ச நட்சத்திரங்கள் அனைவருடைய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இசையில் உருவாகும் ஒவ்வொரு பாடலும் Youtubeல் பல லட்சம் பார்வையாளர்களை பெறுகிறது. சமீபத்தில் விடாமுயற்சி படத்திலிருந்து வெளிவந்த சவதீகா பாடலும் உலகளவில் சக்கப்போடு போட்டு வருகிறது.
விடாமுயற்சி படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












