ஆப்பிரிக்காவின் நாடொன்றுக்கும் நிதி நிறுத்தம்: ட்ரம்ப் கூறும் காரணம்

#image_title

மனித உரிமை மீறல் நடைபெறுவதாக கூறி, தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியை ட்ரம்ப் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் அதிரடியான நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக அவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அறிவிப்பில், “தென் ஆப்பிரிக்க நாட்டில் புதிய நில அபகரிப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. இதற்கு துணையாக அமெரிக்கா நிற்காது. அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி விதிப்பையும், கடுமையான பொருளாதார தடைகளையும் ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் ட்ரம்ப் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version