அமெரிக்காவால் நாடுகடத்தப்பட்ட 104 இந்தியர்கள் நாடு திரும்பினர்

#image_title

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்த 104 இந்தியர்களை நாடுகடத்தியுள்ளது. அனைவரும் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றில் இந்தியா வந்தடைந்துள்ளார்கள். ஜனாதிபதியாக பதவியேற்றதும், சட்டவிரோத புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஏராளமானோர் நாடுகடத்தப்பட்டுவருகிறார்கள். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்த 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு டெக்சாஸிலுள்ள சான் அண்டோனியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, அமிர்தசரஸிலுள்ள ஸ்ரீ குரி ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஆவண சரிபார்ப்பு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் அந்த 104 பேரும், தத்தம் மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட இருக்கிறார்கள்.மாநில அரசுகள் ஊர் கொண்டு சேர்ப்பதற்காக பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version