உலகம்

முறிந்து போகும் காசா போர் நிறுத்தம்

காசா பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான அமெரிக்காவின் நிலைப்பாட்டினால் காசா போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்து போகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு திட்டமிட்டபடி கைதிகளை ஒப்படைக்க முடியாமல் போகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கருத்து வெளியிட்ட இஸ்ரேல் – டெல் அவிவை தளமாக கொண்ட அரசியல் ஆய்வாளரான அகிவா எல்டார்,
பணயக்கைதிகள் நாளை விடுவிக்கப்படுவதைப் பார்க்கப் போகிறோமா என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுக்கு இன்னும் பெயர்கள் கிடைக்கவில்லை. காத்திருக்கும் குடும்பங்களுக்கு அவர்கள் இந்தச் சுற்றில் சேர்க்கப்படுகிறார்களா இல்லையா என்பது தெரியாது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தில் உள்ள தீவிர வலதுசாரி கூட்டாளிகளுக்கு போர்நிறுத்தத்தின் அடுத்த கட்டங்கள் குறித்து  தெளிவான செய்தியை அனுப்பி வருகிறோம். ஹமாஸ், பாலஸ்தீன அதிகாரசபை, மற்றும் அனைத்து அரபு நாடுகளும் இது தொடர்பில்  கவனமாகக் கவனித்து வருகின்றன. இந்த திட்டங்களுக்கு பரந்த இஸ்ரேலிய ஆதரவு இருந்துடன், இஸ்ரேலிய எதிர்க்கட்சிகளும் இஸ்ரேலுடனான அமெரிக்காவின் திட்டத்தை நிராகரிக்கவில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *