5 வருடங்களுக்கு செயல்படவுள்ள ஜனாதிபதியின் திட்டம்!

#image_title

ஜனாதிபதியின், க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குத் செயல்படுத்தப்படும் என்ற உறுதியை வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,” நாடு முழுவதும் 1,740 கிலோமீற்றர் கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், “அழகான கடற்கரை – ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்” என்ற கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.

கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

புதிய கருப்பொருளுக்கமைய, மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 14 இடங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் 23 இடங்களிலும், கம்பஹா மாவட்டத்தில் 24 இடங்களிலும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் 5 இடங்களிலும், மாத்தறை மாவட்டத்தில் 15 இடங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 43 இடங்களிலும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.”என்று க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

Exit mobile version