ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்பு! இனி சாத்தியம்

#image_title

டொனால்ட் ட்ரம்பின் சந்திப்பின் மூலம் நாம் கனவிலும் நினைக்காத விடயங்கள் சாத்தியப்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்க விஜயத்திற்குப் பிறகு (09.02.2025) அமைச்சரவை உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய போதே குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பின் மூலம் சில மாதங்களுக்கு முன் சாத்தியமில்லாமல் இருந்த விடயங்கள் கூட சாத்தியப்பட வாய்ப்பிருப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸை அகற்றுவது, பணயக்கைதிகள் பரிமாற்றம் மற்றும் ‘இஸ்ரேலுக்கு காசாவால் அச்சுறுத்தல் இல்லை’ போன்ற விடயங்களை ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது.

ட்ரம்ப்பின் மாறுபட்ட சிந்தனை இஸ்ரேலுக்கு சாதகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரம்ப்பினால் இஸ்ரேலுக்கு பல வாய்ப்புக்கள் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version