தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைநயன்தாரா. டாக்சிக், Dear Students, மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது புதிதாக மம்மூட்டியின் MMMN படத்திலும் கமிட் ஆகியுள்ளார். ஆம், இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் MMMN திரைப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார்.
துவங்கிய இப்படத்தின் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் நடிகர் மம்முட்டியுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ராப்பகல், பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் என மூன்று திரைப்படங்களில் மம்முட்டி – நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்திருந்த நிலையில், நான்காவது முறையாக MMMN படத்தில் இணைந்துள்ளனர்.
மம்முட்டியுடன் இணைந்து மோகனன்லாலும் நடிக்கிறார். மேலும் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நடிகை ரேவதி, ராஜீவ் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.