இந்தியா

விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பின்னணி என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு காலமே உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர், தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

2014 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவை குறிப்பாக மோடியை பிரதமர் வேட்பாளராக நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பணியாற்றியது பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம். அது முதல் இந்திய அரசியலில் தேர்தல் வியூகம் வகுப்பாளர் என்ற சொல் பிரபலமடையத் தொடங்கியது. அதேபோல் ஐ பேக் நிறுவனமும் பிரபலமானது.

பாஜக தொடங்கி காங்கிரஸ் மட்டுமல்லாமல் பல்வேறு பிராந்திய கட்சிகளுக்கும் இந்த நிறுவனம் தேர்தல் பணியாற்றியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி பிரிந்து சென்றவர்கள் தனித்தனியாக தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

சனி பகவான் தற்போது கும்ப ராசியில் ஆட்சி, அதிபதியாக சஞ்சாரம் செய்து வருகிறார். சூரியன் பிப்ரவரி 12ஆம் தேதி கும்ப ராசியில் நுழையும் போது, சனியும்- சூரியனும் ஒரு குறிப்பிட்ட டிகிரிக்குள் வரும் போது சனி அஸ்தமனம் ஆவார். இதன் காரணமாக சில ராசிகளுக்கு செல்வம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடி

தமிழ்நாட்டில் திமுகவுக்காக பணியாற்றிய ஐபேக் நிறுவனம் சுமார் முந்நூறு கோடிக்கும் மேல் கட்டணமாக பெற்றதாக அப்போதே தகவல்கள் வெளியாகின. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐபேக் நிறுவனத்தை தன்னுடன் பணியாற்றியவர்களிடம் வழங்கிய பிரசாந்த் கிஷோர், பீகார் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.
அன்று பாமக சொன்னதை இன்று விஜய் சொல்கிறாரா?

திமுகவுக்கு பிரசாந்த் கிஷோரை அறிமுகம் செய்து வைத்தது ஆதவ் அர்ஜுனா தான் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக ஆதவ் அர்ஜுனா திமுக பக்கம் இருந்து நகர்ந்து விசிகவில் இணைந்து துணைப் பொதுச் செயலாளராக பணியாற்றினார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின்னர் விசிகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து அங்கும் முக்கிய பொறுப்பை பெற்றுள்ளார்.

இது ஒருபுறமிருக்க அக்டோபர் மாதம் விஜய் கட்சியின் மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகவே பிரசாந்த் கிஷோர் விஜய் உடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது நடைபெறாத சந்திப்பு ஆதவ் அர்ஜுனாவின் எண்ட்ரிக்கு பிறகு நடைபெற்றுள்ளது.

தவெகவுக்கு ஏற்கனவே தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை ஜான் ஆரோக்கியசாமி மேற்கொண்டிருந்தார். ஆனால் அவர் பொதுச் செயலாளர் ஆனந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது விவாதத்திற்கு உள்ளானது. அவரும் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இப்போதே அதற்கான பணிகளை தவெக முன்னெடுக்க தொடங்கிவிட்டது, பிரசாந்த் கிஷோர் சந்திப்பில் அது மேலும் தீவிரமாகும் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *