சினிமா

அஜித்திடம் விஜய்க்கு புடிச்ச விஷயம் என்ன தெரியுமா?

விஜய் மற்றும் அஜித் இருவரும் சமகாலத்து போட்டியாளர்கள் என்பதால் பெரும்பாலும் பேட்டிகளில் ஒருவரை பற்றி இன்னொருவரிடம் கேட்க மாட்டார்கள். நடிகர் அஜித்குமார் பேட்டி கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் அஜித் பற்றி பேசிய பேட்டிகளின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய், அஜித் தேசிய விருது வாங்கியதற்கு எந்த ஒரு பாராட்டும் தெரிவிக்கவில்லை என இணையத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு பதில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவே கொடுத்திருந்தார். அது போல தான் போட்டியாளர் என்பதை தாண்டி அஜித்திடம் தனக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை பற்றி விஜய் சொல்லி இருக்கிறார்.

காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகை அனுஹாசன் விஜய் இடம் அஜித்திடம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன என்று கேட்கிறார். விஜய் அவருடைய தன்னம்பிக்கை பிடிக்கும் என்று சொல்கிறார். அதிலிருந்து ஒரு சில வருடங்கள் கழித்து விஜய் டிவி கோபிநாத் நண்பன் பட ப்ரமோஷன் விழாவை தொகுத்து வழங்குகிறார்.

அவரும் விஜய் இடம் அஜித்திடம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன என்று கேட்கிறார். அதற்கு விஜய் அஜித்தின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் என பதிலளித்திருக்கிறார். ஏனோ தானோ என பதிலளித்திருந்தால் இந்த பேட்டிகளில் விஜயின் பதில் மாறி மாறி இருந்திருக்கும். அஜித்தின் தன்னம்பிக்கை பிடித்ததால் தான் விஜய் அதை ஒவ்வொரு இடத்திலும் மறக்காமல் சொல்லி இருக்கிறார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *