மலையத்தில் திரை பயணத்தை துவங்கி, இந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த அமரன் படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் தண்டேல் படம் வெளிவந்தது. இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இவருடைய நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் கலக்கி கொண்டிருந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அமீர் கான் மகனுடன் ஒரு படம் மற்றும் ராமாயணம் கதையை மையமாக உருவாகும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். முதல் படத்திற்கும் தற்போது ராமாயணா திரைப்படத்திலும் நடிக்க சாய் பல்லவி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதல் படமான பிரேமம் படத்தில் நடிக்க சாய் பல்லவி ரூ. 10 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம். மேலும் தற்போது பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் நடிக்க ரூ. 6 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவை யாவும் இணையத்தில் பேசப்பட்டு வரும் தகவல் மட்டுமே. எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












