சினிமா

நான் copy rights கேட்கப் போவதில்லை…! இசையமைப்பாளர் முடிவு…!

இசையமைப்பாளராக திகழ்பவரே தேவா. தனது பாடல்களால் பல உள்ளங்களை கொள்ளை கொண்டவராக விளங்குகின்றார். தேவா பற்றிய வீடியோ ஒன்று டுவிட்டரில் வெளியாகி உள்ளது. தன்னுடைய பாடல்களை தற்கால இளைஞர்கள் பயன்படுத்தினால் COPY RIGHTS கேட்டகப் போவதில்லை என இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

பாடல்களை இயக்குநர்களும் அவர்களது படங்களில் பயன்படுத்துவதன் மூலம் இளம் தலைமுறையினர்களுடன் எனது பாடல்கள் இணைத்துள்ளதனை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பாடல்களை தற்கால இளைஞர்களும் தேடி ரசித்துக்கொள்வார்கள் என்பதனை தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார்.அவர்களின் ரசனைக்கு முன்பு எத்தனை கோடி ரூபா கொடுத்தாலும் ஈடாகாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் தேவா.

சமீபகாலமாக copy rights விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றார். தற்பொழுது தேவா இவ்வாறு கூறியமை மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *