உலகிலேயே ஸ்மார்ட்டான நாடு பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. World of Card Games என்னும் ஒன்லைன் விளையாட்டு இணையதளம்தான் சுவிட்சர்லாந்துக்கு பெருமையை வழங்கியுள்ளது.
IQ, கல்வி மட்டம் மற்றும் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகிய காரணிகளின் அடிப்படையில் உலக நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டதில், சுவிட்சர்லாந்துக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. சுவிஸ் மக்களில் 40 சதவிகிதம் பேர் பட்டதாரிகள், 32 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அத்துடன், 1,099 பேர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.
பட்டியலில், பிரித்தானியாவுக்கு இரண்டாவது இடமும், அமெரிக்காவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளன. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுவிட்சர்லாந்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிட்டாலும், சராசரி IQவைப் பொருத்தவரை ஜேர்மனிக்கும் நெதர்லாந்துக்கும்தான் முதலிடம், ஜேர்மானியர்கள் மற்றும் நெதர்லாந்து மக்களின் சராசரி IQ 100.7.