அநுர அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் தகவல்

#image_title

அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 16 இன் விதிகளின்படி, நாளை (14) சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படவுள்ளது.

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன 10.02.2025 அன்று வெளியிட்ட விசேட வர்த்தமானி எண். 2423/04 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும், மேலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Exit mobile version