யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அர்ச்சுனாவிற்கு எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது செய்யப்படமாட்டாரா? அல்லது காவல்துறை அதற்கு அஞ்சுகிறதாக என கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க பதில் அளித்தார். “நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்கப்படாது, அவர் மிக உயர்ந்த நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர்.
நடத்தைகள் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். அதைத்தான் பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்.எனவே அவர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும். சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் காலத்தில் காவல்துறை சட்டநடவடிக்கை எடுக்கும்” என்றார்.