இலங்கையிலிருந்து வெளியேறும் அதானி குழுமம்

#image_title

இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை திட்டத்தைச் செயற்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய குழு நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதானி குழுமம் மற்றும் இலங்கை அதிகாரிகளின் அதிகாரபூர்வ அறிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version