மகிந்தவின் விஜேராம் இல்லத்திற்கு நீர் விநியோகம் துண்டிப்பு!

#image_title

மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் தொடர்பான கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாக ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version