கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு சுமார் ஒரு வருடம் முன்பு, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் கூறிய அரசியல் மற்றும் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலானமை உண்மையாகின. சில நாட்களுக்கு முன்பு ரணில் . நெருங்கிய பத்திரிகையாளர்கள் குழுவிடம் இதேபோன்ற பல கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் எதிர்காலம் மீண்டும் இருளடையும் என்று ரணில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர நான் ஊக்குவித்ததில்லை. தற்போதுள்ள நிலையில் அதனை செய்தால் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படும் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சக்திவாய்ந்த நபரிடமிருந்து சமீபத்தில் வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்த கணிப்புக்கு வழிவகுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பான்மை பலத்துடன் சமகால அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், பொருளார ரீதியான அணுகுமுறை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரசியல் அனுபவம் அற்ற புதியவர்களால் நாட்டினை சரியான முறையில் நிர்வகிக்க முடியவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளன நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.