இலங்கைக்கு பல மில்லியன் டொலர் வருமானம்!

#image_title

2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாக ஏழு பில்லியன் அமெரிக்க டொலர், புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானமாக எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி. ஜி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிப் பத்திரம் பெற்ற பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் முதலாவது நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2024இல் 314,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக புலம்பெயர்ந்துள்ளதுடன், வருடத்தில் 6.51 அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்தது எனவும் கூறியுள்ளார். இந்த வருடத்தில் 340,000 இளைஞர்கள் அளவில் தொழிலுக்காக வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version