கொழும்பின் வாகன சாரதிகளுக்கு அறிவித்தல்

#image_title

பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னரே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு மாநகர சபையின் பிரதிநிதி ஒருவர், பொது வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு, கால அளவைக் கண்காணிக்க பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

பொது வாகன நிறுத்துமிடங்களில் 10 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு 70 ரூபாயை கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாகன நிறுத்துமிடங்களில், உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூரணை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் நிறுத்துமிடக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கொழும்பு மாநகரசபையின் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version