அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு!

#image_title

அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardana) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், சந்தையில் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது. கருத்திற் கொண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு அரசாங்கம் நிவாரணத்தினை வழங்க வேண்டும். உயர்ந்துள்ள வாழ்க்கைச் சுமைக்கமைய, அரச ஊழியர்களின் சம்பளம் அவர்களுக்கு முழு மாதத்திற்குமான தேவைகளுக்கு போதாது.

அரச ஊழியர்களின் தற்போதைய சம்பளத்தைக் கொண்டு மாதத்தில் இரண்டு வாரங்களை மாத்திரமே கொண்டு செல்ல முடியும். எனவே அவர்களுக்கான சம்பள அதிகரிப்பை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டும். திங்கட் கிழமை ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்டம் சபையில் முன்வைக்கப்படவிருக்கின்றது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தங்களது சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற பாரிய எதிர்பார்ப்பு அரச ஊழியர்களிடத்தில் உண்டு.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை கருத்திற்கொண்டு குறைந்தபட்சம் அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version