இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள குற்றவாளிகள்

#image_title

இந்தியாவில்(India) தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க, தெரிவித்துள்ளார். கொழும்பில்(Colombo) செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய ஏழு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 7 சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்தக் குற்றங்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களை நாடு கடத்துவதற்கான திட்டம் நடைமுறையில் உள்ளது.இந்தியாவில் தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று பொலிஸ் பேச்சாளார் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version