41 வீதத்தினால் அதிகரித்துள்ள வருமானம்!

#image_title

இலங்கையில் சுற்றுலாத்துறை வருமானம் 41 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக  மத்திய வங்கி அறிவித்துள்ளது.   கடந்த ஆண்டில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் 959.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒப்பீட்டளவில் 2023ம் ஆண்டை விடவும் 41.5 வீத அதிகரிப்பாகும். 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை துறையின் வருமானம் 678.5 பில்லயின் ரூபாவாக காணப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் இது 281.3 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறையின் மூலம் வருமானம் 105.6 பில்லியன் ரூபா என வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version