கூகுள் மீது சட்ட நடவடிக்கை – எச்சரிக்கும் பெண் ஜனாதிபதி

#image_title

கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார். டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் மெக்சிகோ வளைகுடாவை (Gulf of Mexico) அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்வதாக டிரம்ப் அறிவித்தார்.

மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றம் குறித்து டிரம்ப் அறிவித்த சில நாள்களிலேயே கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றியது. கடந்த வாரம் மெக்சிகோ பெயர் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஒன் விமானத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகருக்குப் பயணித்தபோது இதற்கான ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்ட காணொளி வெளியாகி இருந்தது. பெயர் மாற்றமானது கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டது.

மெக்சிகோ வளைகுடாவில் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா என்றும், அமெரிக்காவில் அமெரிக்க வளைகுடா என்றும், இதர நாட்டில் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா (அமெரிக்க வளைகுடா) என்றும் கூகுள் நிறுவனம் பெயர் மாற்றம் செய்துள்ளது. ”கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய காரணத்தால் கூகுள் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம் தெரிவித்துள்ளார்.

“சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க கூகுள், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version