மருத்துவர்களுக்கு பாதிப்பாக வரவு செலவுத் திட்ட திருத்தம்

#image_title

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச சேவையில் உயர் பதவி நிலைகளை வகிப்பவர்களுக்கு சம்பள திருத்தம் பாதக நிலையை உருவாக்கியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பளத் திருத்தம் காரணமாக மாதாந்த இறுதிச் சம்பளத் தொகையில் குறைவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தாதியர் போன்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

விடயம் தொடர்பில் அமைச்சர்களுடன் விரைவில் குறித்த தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெற்கு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

Exit mobile version