காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்

#image_title

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025  ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்தெரிவித்த அவர், 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும். www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும்.

கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version