தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.1999ம் ஆண்டு பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் உங்கள் தீர்ப்பு என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.
விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார். பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி தான். சின்னத்திரை, வெள்ளித்திரை என கொடிகட்டி பறந்த நடிகை டிடி அவ்வளவாக தொலைக்காட்சி பக்கம் வராதது மட்டுமே ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக உள்ளது.
டிடி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ. 4 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகவும், இவரின் சொத்து மதிப்பு ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் சினிமாவை தாண்டி தனியாகவும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.