அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப், மற்றும் எலன் மஸ்குக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப், மற்றும் மஸ்க் கூட்டினைவால் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மூன்றாம் திங்கள் அமெரிக்காவில் “பிரசிடெண்ட்ஸ் டே” கொண்டாடப்படுகிறது. குறித்த தினத்தில் நாடு முழுவதும் விடுமுறை என்பதால், அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்களை நினைவுகூர்ந்து மக்கள் நன்றி செலுத்துவர். இந்த ஆண்டுபிரசிடெண்ட்ஸ் டே நிகழ்வில் ட்ரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
50501 என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இயக்கத்துக்கு 50 ஆர்ப்பாட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்று பொருள். பனிப்பொழிவுக்கு மத்தியில் வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ட்ரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியிருந்தனர். ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களிலும் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.